×

ஊருணிகள் நிரம்பியதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது கமுதி மக்கள் மகிழ்ச்சி

கமுதி, டிச.7: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அனைத்து ஊருணியிலும் மழைநீர் நிரம்பியதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வறட்சியில் சிக்கி தவிக்கும் பகுதியில் ஒன்று கமுதி ஆகும். இப்பகுதியில் மழை பெய்தால் தான் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். சில வருடங்கள் பருவமழை பொய்த்தால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவும். கமுதி பேரூராட்சியை பொறுத்தவரை செட்டிஊரணி, பட்டிஊரணி, கண்ணார்பட்டி ஊரணி, பெரிய தர்ஹா அருகே உள்ள ஊரணி, வண்ணான் ஊரணி, குழவன்குட்டை ஊரணி என 6 ஊரணிகள் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கியமாக விளங்குகின்றன. கமுதி பேரூராட்சி பகுதியில் நிலத்தடி நீரை அதிகரிக்க ஆதாரமாக விளங்கும் செட்டி ஊரணிக்கு மழைநீர் வரும் பாதையில் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி அகற்றியது. இதனால் செட்டி ஊரணி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இது போல் மற்ற ஊரணிகளிலும் நிரம்பியது. மேலும் ஊரணிகள் முறையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் 6 மாத காலத்திற்கு கமுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது என கூறப்படுகிறது.

Tags : Kamuti ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் –...