- விவசாய தொழிலாளர் சங்கம்
- பேராவூரணி
- தமிழ்நாடு வேளாண்மை தொழிலாளர்
- Rajamanickam
- விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்டம்
- பக்கிரிசுவாமி
பேராவூரணி, ஆக.9: பேராவூரணியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட சம்பளத்தை ரூ.700 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்,
வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும், மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்ட நிதி ரூ.4 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும், வீடில்லாதவர்களுக்கு ரூ.6 லட்சத்தில் இலவச அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், குடிமனை பட்டா கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். இதில், விவசாய தொழிலாளர் சங்க பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் சித்திரவேலு, சண்முகம், சுந்தரராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் வீரமணி, தட்சிணாமூர்த்தி மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
