×

தஞ்சையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.9: தஞ்சை வடக்கு வட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு வட்ட செயலாளர் அஜய்ராஜ் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் பாபு வாழ்த்துரை வழங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பார்த்தசாரதி நிறைவுரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசு துறைகளிலும் தொகுப்பூதிய முறைகளை நடைமுறைப்படுத்துவதுடன், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறைகளை அமல்படுத்துவதை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வடக்கு வட்ட இணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். நான் உடல்நல பிரச்சனைகளால் அவதியுற்று வருகிறேன்.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவதாக அறிந்து, மருத்துவ பரிசோதனை செய்தேன். இம்முகாமில் இ.சி.ஜி. எகோ, ரத்த பரிசோதனை, போன்ற பல்வேறு பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் ஒவ்வொன்றாக செய்தனர். எந்தவொரு அலைகழிப்பின்றி பரிசோதனைகள் செய்தது எங்களுக்கு மன நிறைவாக உள்ளது. இத்திட்டம் எங்களை போன்ற ஏழை எளிய மக்களுக்கு வரப்பிரசாதம்.தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Tags : Hindu Religious and Charitable Endowments Department ,Government Employees Association ,Thanjavur ,Commissioner ,Thanjavur North Circle Government Employees Association ,North Circle ,Ajayraj ,State ,Joint Secretary ,Babu ,
× RELATED ஓய்வூதியர் தின விழா