- அரசு ஊழியர் சங்கம்
- தா.பழூர் ஒன்றிய அலுவலகம்
- தா.பழூர்
- யூனியன் அலுவலகம்
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
- அரியலூர் மாவட்டம்
தா.பழூர், ஆக.9: தா.பழூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய அலுவலம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், அவுட்சோர்சிங் மற்றும் காண்ட்ராக்ட் போன்ற முறைகளை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் தொகுப்பூதியம், மதிப்பூதியம் ,சிறப்பு காலமுறை ஊதியம் ஆகிய முறைகளில் பணி அமர்த்துவது தற்பொழுது அதிகரித்து வருகிறது.
இதனை ரத்து செய்து அந்த முறைகளின் கீழ் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்யராஜ் தலைமை வகித்தார். இதில் ஊராட்சி செயலர் இளங்கோவன் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அரசு துறை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
