ஓட்டை விழுந்த தொட்டி: வீணாகும் குடிநீர்

குஜிலியம்பாறை, டிச. 7 :   குஜிலியம்பாறையில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ள மெயின்சாலையில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக, மெயின் ரோட்டில் முன்பு இருந்த  பள்ளி எதிரே மின்மோட்டார் அறையின் மேல்பகுதியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட  பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு, குழாய் மூலம் குடிநீர் சப்ளை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இத்தொட்டியில் ஓட்டை விழுந்தது. இதனால் குடிநீர் ஏற்றும் போது, தண்ணீர் முழுவதும் ஓட்டை வழியே வெளியேறி வீணாகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, ஓட்டை விழுந்த குடிநீர் தொட்டியை மாற்றியமைத்து, புதிய தொட்டி அமைத்து இக்குடியிருப்பு மக்களுக்கு சீராக குடிநீர் சப்ளை செய்ய பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>