தூத்துக்குடி, ஆக.9:தூத்துக்குடி அருகே மீளவிட்டான் பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதைக் கண்டதும் அப்பகுதி மக்கள் சிப்காட் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீர்த்தேக்க தொட்டிக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
