- தூய உதவித் தாய் ஆலயத் திருவிழா
- செக்கலை
- காரைக்குடி
- திருவிழா
- தூய உதவித் தாய் கோயில்
- உதவியின் தாய்
- அருள்முனைவர் சார்லஸ்…
காரைக்குடி, ஆக. 9: காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சகாய அன்னையின் திருவுருவக்கொடி மாலை 5.30க்கு ஆலயத்திலிருந்து பவனியாக கொடிமரத்துக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து 5.45க்கு சகாய அன்னையின் திருவுருவக்கொடி பங்குத்தந்தை அருள்முனைவர் சார்லஸ் தலைமையில் கொடைக்கானல் செண்பகனூர் குருத்துவக்கல்லூரி அதிபர் அருள்முனைவர் ஆண்மோ புனிதநீரால் அர்ச்சித்து கொடியினை ஏற்றிவைத்து திருப்பலியில் பங்கேற்றனர். நவநாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 5.30க்கு திருச்செபமாலையும் நவநாள் திருப்பலியும் நடைபெற உள்ளது. 10ம் தேதி திவ்ய நற்கருணை விழாவும், 16ம் தேதி சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
