×

பாபர் மசூதி இடிப்ைப கண்டித்து தமுமுக கருத்தரங்கு

நெல்லை, டிச.7: பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் தமுமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அலிப் பிலால்ராஜா, மமக மாவட்ட செயலாளர் டவுன் ஜமால் முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில துணை தலைவர் ஹமீது, சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,  தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுல்தான், மாவட்ட துணை தலைவர் செய்யது ஜாவித், மாவட்ட துணை செயலாளர்கள் பெஸ்ட் ரசூல், கம்பு கடை ரசூல்மைதீன், முகம்மதுயாசிர், காஜா, ஏர்வாடி மாஹீன், வீரை நவாஸ், சி.பி.எம்.கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம், விசிக மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், கலைக்கண்ணன், திராவிடர் தமிழர் கட்சி பொது செயலாளர் கதிரவன் ஆகியோர் பேசினர்.

கருத்தரங்கில் நிர்வாகிகள் மேலப்பாளையம் பகுதி தலைவர் மைதீன் பாதுஷா, பாளை பகுதி தலைவர் காதர்மைதீன், செயலாளர் அப்துல்நாசர், டவுன் நகர தலைவர் கோல்டன் காஜா, பேட்டை நகர தலைவர் ராஜா, ஏர்வாடி பேரூர் கிளை தலைவர் அன்வர், மானூர் ஒன்றிய தலைவர் சாகுல்கமீது, துலுக்கர்பட்டி கிளை தலைவர் இஸ்மாயில், வீரவநல்லூர் கிளை தலைவர் சபீக், திசையன்விளை கிளை தலைவர் அஜிஸ், ஆத்தங்கரை கிளை தலைவர் மன்சூர், கரிக்காதோப்பு கிளை தலைவர் சதாம், வள்ளியூர் கிளை தலைவர் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பேட்டை ஷேக் நன்றி கூறினார்.

முன்னதாக நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக நல்லிணக்கத்திற்கும் சமய நல்லிணக்கத்திற்கும், சிறுபான்மையினரின் உரிமைக்கும் வேட்டு வைத்த நாள் இது. பாஜவின் இன்னொரு முகமாக ரஜினிகாந்தை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சி தொடங்குவதாக டிசம்பர் 3ம் தேதி டுவிட்டரில் அறிவிக்கிறார். 31ம் தேதி எப்போது என்று அறிவிப்பு வரும் என்கிறார். அப்படி என்றால் கட்சி தொடங்க மாட்டார் என்று அர்த்தம். 40 ஆண்டுகாலம் அவரை உயிருக்கு உயிராக நேசிக்கும் மன்றத்தின் நிர்வாகி ஒருவரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க மனமில்லை. பாஜவில் இயங்கிக்கொண்டிருந்த அர்ஜுன மூர்த்தியை வாடகைக்கு எடுத்துள்ளார். தமிழருவிமணியன் எந்த கட்சிக்கு கூப்பிட்டாலும் போவார்.  ஒரு கட்சிக்கு மேற்பார்வையாளர் போட்ட புண்ணியவான் ரஜினிகாந்த் தான். இவ்வாறு அவர்  கூறினார்.

Tags : seminar ,demolition ,Babri Masjid ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...