- புதிய அங்கன்வாடி மையம்
- மேலத்தொண்டியக்காடு கிராமம்
- முத்துப்பேட்டை
- அங்கன்வாடி
- மேலத்தோண்டியக்காடு
- திருவாரூர் மாவட்டம்
- திருத்துறைப்பூண்டி
- சட்டமன்ற உறுப்பினர்
- மாரிமுத்து
முத்துப்பேட்டை,ஆக.8: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மேலதொண்டியக்காடு கிராமத்தில் புதியதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து திறப்பு விழா நடைபெற்றது. கிராம வாசிகள் பள்ளி நிர்வாகிகள் முன்னிலையில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை குழு தலைவர் இரா மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றியழகன், விஜயலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்உமேஷ் பாபு மற்றும் ஆசிரியர்கள், கிராம வாசிகள் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
