- அண்ணா எந்தவகம் போர் அறை
- பாடுகோட்டா
- படுக்கோட்டை, ஆக
- அண்ணா கல்வி போர் அறை
- திமுகா
- தஞ்சை தெற்கு மாவட்டம்
- சிவகொல்லா
- நதியம்மன் கோயில்
- பட்டுக்கோட்டை நதியம்மன் கோயில்
- அமைச்சர்
- மேற்படிப்பு
- கோவி
- செஜியான்
பட்டுக்கோட்டை, ஆக. 8: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பின்புறம் உள்ள சிவக்கொல்லை பகுதியில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா அறிவகம் வார் ரூம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு அண்ணா அறிவகம் வார் ரூமை திறந்து வைத்தார்.
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல் வரவேற்றார். எம்.எல்.ஏக்கள் பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக தலைமை கழகப் பேச்சாளர் மணிமுத்து, நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
