×

அரியலூர் அருகே டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

தா.பழூர், ஆக.8; அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அம்பலவர் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (65) விவசாயி. இவர் தனது சொந்த வேலையின் காரணமாக அம்பலவர் கட்டளை கிராமத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வி.கைகாட்டி சாலையில் ஒரத்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

ஒரத்தூர் பிரிவு சாலையில் ஒரத்தூர் கிராமத்திற்கு செல்வதற்காக திரும்பிய போது எதிர் திசையில் வி கைகாட்டியில் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக சிதம்பரம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதில் நிலை தடுமாறி படுகாயம் அடைந்து, சாலையில் கிடந்த சிதம்பரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.

அங்கு சிதம்பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் சிதம்பரத்தின் மகன் அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Ariyalur ,Tha.Pazhur ,Chidambaram ,Ambalavar Kattalai ,Vikramangalam ,Ariyalur district ,Orathur village ,Ambalavar Kattalai village ,V.Kaikatti road ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்