கரூர், ஆக.8: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே விரும்பிய படிப்பு கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்தவர் தனுஷ் (19). மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு பயின்று வந்தார்.
இந்நிலையில், தனுஷ், கடந்த சில மாதங்களாக சட்டப்படிப்பு மற்றும் கால்நடை மருத்துவர் படிப்பு கிடைக்காத விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ், கடந்த 5ம்தேதி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
