×

ஏடிசி., பகுதி சாலையில் பாதாள சாக்கடை மூடியை மாற்றியமைக்க வலியுறுத்தல்

ஊட்டி,டிச.7: ஊட்டி  எட்டின்ஸ் சாலையில் ஏடிசி., பகுதியில் சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி சேதமடைந்து காணப்படுவதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் முக்கிய சாலைகளுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை பராமரிப்பிற்காக பணி காரணமாக அண்மையில் இரும்பு மூடிகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக கான்கிரீட் மூடிகள் அமைக்கப்பட்டன.

ஏடிசி., பகுதியில் காவலர் அறை உள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூடி மற்றும் கான்கிரீட் தளம் வாகனங்கள் சென்று வந்ததில் சேதமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே விபத்தை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த பாதாள சாக்கடை தொட்டியின் மூடியை சரி செய்ய வேண்டும்  என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : part road ,
× RELATED நகராட்சி அதிகாரிகள் அதிரடி கூடலூர்...