×

பீளமேட்டில் மின்பெட்டி இடமாற்றம் செய்த விவகாரம் உதவி மின்பொறியாளர் இடமாற்றம்

கோவை, டிச. 7: கோவை பீளமேடு, மசக்காளிபாளையம், பெரியார் நகர் சேர்ந்தவர் கவிதா. இவருக்கு அவினாசி சாலை கோவை அரசு மருத்துவக்கல்லூரி எதிரில் வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தில் மூன்று மின் இணைப்புகள் இவரது பெயரில் உள்ளது. இந்நிலையில், பீளமேடு கிழக்கு பிரிவு மின்வாரியத்தில் இருந்து வந்த பணியாளர்கள் மின்மாற்றி மின் இணைப்பினை துண்டித்து, இவருக்கு சொந்தமான இடத்திலுள்ள மின்மீட்டர் பெட்டியை இடமாற்றம் செய்தனர். இது தொடர்பாக கன்யூமர் வாய்ஸ் லோகு அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், விதிகளை மீறி மின்பெட்டி இடமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பீளமேடு கிழக்கு பிரிவு உதவி மின்பொறியாளர் சுரேஷ்பாபு, கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆலாந்துறை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த விக்னேஷ்குமார், பீளமேடு கிழக்கு பிரிவு உதவி மின்ெபாறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Assistant Electrical Engineer ,Peelamedu Transfer ,
× RELATED தா.பழூர் மின்வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்