தொண்டி, ஆக.8: தொண்டி அருகே நம்புதாளையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யும் விதமாக இல்லம் தேடி சேவை என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில் இன்று நம்புதாளையில் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைகளை மனுவாக கொடுத்து தீர்வு காணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
