×

லண்டன் பல்கலைகழகத்தில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம்: இந்திய மாணவர் குற்றச்சாட்டு

லண்டன்: இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் 22 வயதான கரண் கட்டாரியா. நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த கரண், அந்த குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர். இவரது பெற்றோர்கள் பெரும் போராட்டங்களுக்கிடையே கரணை படிக்க வைத்து வருகின்றனர். இந்தியாவில் இளங்கலை முடித்த கரண், கடந்த ஆண்டு லண்டனிலுள்ள புகழ் பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் பல்கலை கழகத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில், அப்பல்கலை கழக மாணவர் சங்கத்தின் பொதுசெயலாளர் பதவிக்கு நண்பர்களின் ஆதரவுடன் கரண் கட்டாரியா போட்டியிட்டார். ஆனால், கரண் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, அவரை பல்கலை கழக நிர்வாகம் தகுதி நீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து கரண் கூறியதாவது, “நான் இந்தியாவில் இருந்து சென்ற இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதால், இஸ்லாமிய வெறுப்புணர்வுடைய இந்து தேசியவாதி என்று என் மீது பொய் குற்றச்சாட்டுகளை நிர்வாகம் சுமத்தியுள்ளது. என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பியவர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு பதிலாக, அவர்களின் பேச்சை கேட்டு என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

The post லண்டன் பல்கலைகழகத்தில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம்: இந்திய மாணவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : India ,London ,University ,Karan Kataria ,Ariana ,Karan ,London University ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை