மாவட்டம் முழுவதும் சாரல் மழை

நாமக்கல், டிச.4: புரெவி புயல் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  நேற்று அதிகாலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்தது. மாலை வரை இடைவிடாது மழை  பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் உழவர்  சந்தையில் விவசாயிகளின் வருகை குறைவாக காணப்பட்டது. நடைபாதை வியாபாரிகள்  கடைபோட முடியாமல் பாதிக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு  விபரம்(மில்லி மீட்டரில்):  எருமப்பட்டி - 5, குமாரபாளையம் - 3, மங்களபுரம்  - 6, மோகனூர் - 4, நாமக்கல் - 10, பரமத்திவேலூர் -2, புதுச்சத்திரம் - 2,  சேந்தமங்கலம் - 2, கொல்லிமலை - 6

மில்லிமீட்டர்.

Related Stories:

>