குடிசை வாரிய வீடுகள் ஏலம் சட்டத்திற்கு புறம்பானது சத்யா எம்எல்ஏ குற்றச்சாட்டு

ஓசூர், டிச.4: ஓசூர் வீட்டு வசதி வாரியத்தால் நடத்தப்பட்ட குடிசை வாரிய வீடுகள் ஏலம் சட்டத்திற்குப் புறம்பானது என சத்யா எம்எல்ஏ குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓசூர் வீட்டு வசதி வாரியத்தால், கடந்த 19ம் தேதி விடப்பட்ட ஏலம் சட்டத்திற்கு புறம்பானது. அதிகாரிகள் ஒரு சில நபர்களுடன் டிமாண்ட் அதிகம் உள்ள ஒரு சில வணிக மனைகளை (சுமார் 14 வணிக மனைகள்) ஏலம் விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ஓசூர் மாநகரில் சுமார் 5 முதல் 6 கி.மீக்கு அப்பால் போடப்படும் வீட்டு மனைகளின் விலை சதுர அடி ₹1000 முதல் ₹2000 என்று இருக்கும் போது சாக்கடை வசதி, சாலை வசதி, மின்சார வசதி அங்கீகரிக்கப்பட்ட மனை என்று அனைத்தும் உள்ளடக்கிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மனைகள் எவ்வளவு ஏலம் போகும்?. அரசாங்க வழிகாட்டு தொகையை, தங்களுக்கு சாதகமானதாக எடுத்துக் கொண்டு, அதில் இருந்து சுமார் 5 சதவீதம் அதிகமாக கோரி, அரசாங்கத்தை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை ஏமாற்றி இடத்தையே கேலிக்கூத்தாக்கி விட்டார்கள். எனவே, கடந்த 19ம் தேதி நடைபெற்ற ஏலத்தை ரத்து செய்து, மீண்டும் முறைப்படி வெளிப்படையாக மறு ஏலம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>