தர்மபுரி ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

தர்மபுரி, டிச.4: தர்மபுரி ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், பழைய தர்மபுரியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, தர்மபுரி எம்.பி.டாக்டர் செந்தில்குமார், முன்னாள் எம்.பி.தாமரைச்செல்வன், ஒன்றிய செயலாளர் சேட்டு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், பழைய தர்மபுரி ஊராட்சி மன்றத்தலைவர் சிவலிங்கம், மாவட்ட மகளிர் அணி முத்துலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாந்தி காவேரி, மாங்கனி செல்வராஜ், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பிரபு ராஜசேகர், லட்சுமணன், வக்கீல் வீரமணி, லட்சுமணன், கந்தசாமி, இளைஞரணி செல்லதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும், திமுக தலைவர் நிறுத்தும் வேட்பாளர்களை, வெற்றி பெற அனைவரும் உழைப்பது என முடிவு

செய்யப்பட்டது.

Related Stories:

>