வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

பென்னாரம், டிச.4: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் திருத்தச்சட்டம், 2020 திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும்  விவசாயிகள் மீது மத்திய பாஜ அரசு அடக்குமுறைகளை ஏவி விட்டு வருகிறது. இதனை  கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், நாளை (5ம் தேதி) காலை 9மணி அளவில், பாலக்கோடு பஸ்நிலையத்தில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், விவசாய பெருமக்கள், வணிகர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இன்னாள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>