×

அரசு ஊழியருக்கு பணி இடையூறு செய்தவர் கைது

திருச்சி, ஆக.7: திருச்சி அறநிலைத்துறை உதவி கமிஷனரை பணி செய்ய விடாமல் தடுத்த சிபிஎம் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். திருச்சி இந்த சமய அறநிலையத்துறையில் மனிதவளம் மற்றும் பொது பணியகத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் லக்‌ஷ்மணன் (58). இவர் நேற்று ஸ்ரீரங்கம் வடக்கு கோபுரவாசல் சத்திர வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிபிஐ மாவடக்குழு உறுப்பினர் சொக்கி என்ற சண்முகம் என்பவர், லக்‌ஷ்ணமனை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்தார். இதுகுறித்து லக்‌ஷ்மணன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் சொக்கியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

 

Tags : Trichy ,CPM ,Assistant Commissioner ,Trichy Charities Department ,Lakshmanan ,Human Resources ,General Bureau ,Religious Charities Department ,Srirangam North Gopuravasal Chattira Road ,CPI ,Chokki ,Shanmugam ,
× RELATED ரூ.1.17 கோடி கஞ்சா திரவம் பறிமுதல்