- உலக தாய்ப்பால் வாரம்
- திருத்துறைப்பூண்டி
- அரசாங்க மருத்துவமனை
- திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை
- திருவாரூர் மாவட்டம்
- டெல்டா ரோட்டரி சங்கம்
- இன்னர் வீல் அசோசியேஷன்
- அரசு
- தலைமை மருத்துவ அதிகாரி
- பாபு
- அபிநயா பாபு
- ஷீலா
- ஜனாதிபதி
- மதன்
திருத்துறைப்பூண்டி, ஆக. 7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உலக தாய்பால் வார விழா கொண்டாடப்பட்டது. டெல்டா ரோட்டரி சங்கமும் இன்னர் வீல் சங்கமும் இணைந்து நடத்திய இந்த விழாவில், அரசு தலைமை மருத்துவர் பாபு, மருத்துவர்கள் அபிநயா பாபு, ஷீலா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். டெல்டா ரோட்டரி சங்க தலைவர் மதன் வரவேற்றார்.
தாய்பாலின் மகத்துவம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தாய்பால் சேகரித்து அமிர்தம் வங்கிக்கு வழங்கி வரும் மாசில் ஆஷா, பணிக்கு செல்லும் தாய்மார்கள் குழந்தைக்கு எவ்வாறு தாய்பால் சேகரித்து வைத்து கொடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் டெல்டா ரோட்டரி சங்க சாசன தலைவர் கணேசன், முன்னாள் தலைவர்கள் செல்வகுமார், காளிதாஸ், ரமேஷ், பாலமுருகன், செயலாளர் கார்த்திக், உறுப்பினர்கள் ராம்பிரசாத், சந்தோஷ், தீபன், ஹோமியோபதி மருத்துவர் மாலதி, இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் இன்னர்வீல் சங்க தலைவர் கிருத்திகா நன்றி தெரிவித்தார்.
