திருவாரூர், ஆக. 7: திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென அரசு சார்பில் மாவட்ட எஸ்பிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருவாரூர் எஸ்.பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வரும் நிலையில் இந்த சிறப்பு குறைதீர் கூட்டமானது எஸ்.பி கருண்கரட் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொது மக்களிடமிருந்து 19 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இதில் சொத்து பிரச்சனை மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பெறப்பட்ட மனுக்களுக்கு வருவாய் துறை மற்றும் நீதிதுறை மூலம் தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை மனுதாரர்களுக்கு எஸ்.பி கருண்கரட் வழங்கிய நிலையில் மீதமுள்ள மனுக்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டிய மனுக்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கும் மீதமுள்ள மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு எஸ்.பி கருண்கரட் உத்தரவிட்டதுடன் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அதுகுறித்த விபரத்தினை அறிக்கையாக அனுப்பி வைக்குமாறும் டி.எஸ்.பிக்களுக்கு உத்தரவிட்டார்.
