×

முதல்வர் சொன்னார் செய்தார்: டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

சென்னை: முதல்வர் சொன்னார் செய்தார் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடந்த தேர்தல் சிறப்பு மாநாட்டில் 7 அம்ச உறுதிமொழிகளை வெளியிட்டு மக்களிடம் வாக்கு கேட்டார் திராவிட நாயகன் நம் கழகத் தலைவர்.

அதில் முதல் அம்சம், பொருளாதாரம். “வளரும் வாய்ப்புகள்-வளமான தமிழ்நாடு அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்க பொருளாதாரத்தை எட்டுவது முதல் இலக்கு” என்று உறுதியளித்தார். அவரது வாக்குறுதியை நம்பி வாக்களித்து தன்னை முதலமைச்சராக்கிய மக்களுக்காக ஓயாது உழைத்து, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியடைய வைத்து, தான் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றியுள்ளார்.

திருச்சி சிறுகனூரில் முதல்வர் உறுதியளித்த நாள் 2021 மார்ச் 7. தமிழ்நாடு 11.29% என்ற இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டியிருப்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்துறை அறிவித்துள்ள நாள் 2025 ஆகஸ்ட் 5. பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்ற நம் தலைவர் அதனை நான்கே ஆண்டுகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆகையால்தான் இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராக திகழ்கிறார் நம் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,T.R.P. Raja ,Chennai ,Industries Minister ,Dravida Nayagan Nam ,Kazhagam ,Sirukanur, Trichy ,Tamil Nadu ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...