×

தொண்டியில் ஆடித் திருவிழா

தொண்டி, ஆக.7: தொண்டி தெற்கு தோப்பு மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பால்குடம், வேல் காவடி உட்பட பல்வேறு காவடி எடுத்தனர். நேற்று மாலை 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் இருந்து முளைப்பாரி எடுத்து கிழக்கு கடற்கரை சாலை, பாவோடி மைதானம் வழியாக ஊர்வலமாக கடல் கரைக்கு சென்று அங்கு கரைத்தனர்.

Tags : Aadi festival ,Thondi ,Aadi festival of ,Thondi South Thoppu Mariamman Temple ,Paalkudam ,kavadi ,East Coast Road ,Paodi Maidan ,
× RELATED ஓய்வூதியர் தின விழா