×

விவசாயியிடம் செல்போன் திருட்டு

கெங்கவல்லி, ஆக.7: கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(50). விவசாயியான இவர், நேற்று முன்தினம், தெடாவூர்- வீரகனூர் சாலையில் உள்ள தனியார் கடையில் மாட்டுத்தீவனம் வாங்கியுள்ளார். அப்போது, தனது செல்போனை மறந்து கடை டேபிளில் வைத்து விட்டு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் கடைக்கு வந்த இருவர் செல்போனை திடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து, கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு செல்போன் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : Kengavalli ,Govindaraj ,Punalvasal ,Thedavur-Veeraganur road ,
× RELATED கார் மீது அரசு பஸ் மோதி விபத்து