நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதி பணி ஆணை வழங்கல் குண்டாசில் வாலிபர் கைது

திருச்சி, டிச.4: திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுனை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(56), ஆம்னி பஸ் புரோக்கர். கடந்த மாதம் 1ம் தேதி கலெக்டர் அலுவலக சாலையில் நண்பருடன் சேர்ந்த பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில், உறையூர் பாண்டமங்கலம் திருப்பதி(23), கீழகல்கண்டார்கோட்டை பிரகாஷ்(26), கரூர் மாவட்டம் குளித்தலை கிஷோர்குமார்(23) ஆகிய 3 பேரை கடந்தாண்டு 2ம்தேதி கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் பிரகாஷ் மீது கோர்ட், அரியமங்கலம், கன்டோன்மென்ட் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இதில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வதால் பிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற மாநகர கமிஷனர் லோகநாதன், சிறையில் உள்ள பிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் உள்ள பிரகாஷிடம் போலீசார் வழங்கினர்.

Related Stories:

>