தா.பேட்டை, டிச.4: தா.பேட்டை அருகே துலையாநத்தம் புது காலனியில் வசித்து வருபவர் ருக்மணி(80). இவரது ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவர் மழையால் இடிந்து சேதமானது. இது குறித்து ஆர்ஐ கலைவாணன், விஏஓ காசி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு முசிறி தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து தாசில்தார் சந்திரதேவநாதன் மேற்பார்வையில் மூதாட்டி ருக்மணிக்கு இலவச சேலை, அரிசி, கெரசின் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் நேரில் சென்று வழங்கினார். மேலும் நிவாரண உதவித்தொகை ரூ.4,100 மூதாட்டியின் வங்கி கணக்கிற்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.