விரைந்து அகற்ற வலியுறுத்தல் மழையால் பாதித்த மக்களுக்கு குடந்தை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் உணவு வழங்கினார்

கும்பகோணம், டிச. 4: கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் ஊராட்சி மேலாத்துக்குறிச்சியில் மழை காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மேலாத்துக்குறிச்சி அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கும்பகோணம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், பால் கூட்டுறவு சங்க தலைவருமான NRVS. செந்தில் தனது சொந்த நிதியிலிருந்து மதியம் மற்றும் இரவு உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது நீலத்தநல்லூர் ஊராட்சி தலைவர் மரகதம் கோவிந்தராஜன், துணைத்தலைவர் பார்வதி, நிர்வாகிகள் சுவாமிநாதன், அலெக்ஸ், இளங்கோவன், முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>