×

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழைக்கு நிரம்பி வழியும் அரும்பாவூர், வடக்கலூர் ஏரிகள்

பெரம்பலூர்,டிச.4:பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அரும்பாவூர், வடக்கலூர் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக, மாவட்டத்தின் மேற்கு, வடமேற்கு எல்லைகளாக விளங்கும் பச்சை மலைத் தொடர்ச்சியிலிருந்து உற்பத்தியாகி வரும் கல்லாற்று நீரின் வர த்து காரணமாக, கடந்த 18ம்தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் முறையாக 52.63 மில்லியன் கன அடி கொள்ளளவும், 565 ஏக்கர் பாசன வசதியும் கொண்ட அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பிவழியத் தொடங் கியது. அதன் உபரி நீர் அரு கிலுள்ள சித்தேரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அரும்பாவூர் சித் தேரி தலைதட்டி நின்ற போதும் நிரம்பிவழிய சிறு மழைக்காக காத்திருந்தது.

இந்நிலையில் புரெவிப்புயல் காரணமாக 2,3ம் தேதிகளில் விடியவிடிய, பகல் முழுக்கப் பெய்த மழையின் காரணமாக 2ம் தேதி முதல் 12மில்லியன் கனஅடி கொள்ளளவு கொ ண்ட அரும்பாவூர் சித்தேரி நிரம்பி வழிந்து வருகிறது. நேற்று 21.85 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொ ண்ட வடக்கலூர் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. இந்த உபரிநீர் வடக்கலூர் அக்ரஹாரம் ஏரிக்குத் தண்ணீர் சென்று கொண்டிருக்கி றது. இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்ப ணித்துறையின் கட்டுப்பாட் டிலுள்ள 73 ஏரிகளில் அரும்பாவூர் பெரியஏரி, அரும்பாலூர் சித்தேரி, வடக்கலூர் பெரிய ஏரி என 3 ஏரி கள் 100சதவீதம் நிரம்பி வழிந்துள்ளன. பாண்டகப் பாடி ஏரி 81-90சதவீதம் நிரம் பியுள்ளது.

கீரனூர் ஏரி, பெண்ணக்கோணம் ஏரி, வய லூர்ஏரி ஆகிய 3ஏரிகள் 51-70 சதவீதத்திற்கு நிரம்பி உள்ளன. நெற்குணம் ஏரி, கீழப்பெரம்பலூர் ஏரி, பெரம்பலூர் சின்ன ஏரி, கை.களத்தூர் ஏரி, எழுமூர் ஏரி, அகரசீகூர் ஏரி ஆகிய 6ஏரிகள் 26-50 சதவீதத்திற்கு நிரம்பியுள்ளன. வெண்பாவூர் ஏரி, துறைமங்கலம் ஏரி, ஒகளூர் ஏரி, ஆய்குடி ஏரி, ஆண்டி குரும்பலூர் ஏரி, பெருமத்தூர் ஏரி, தொண்டமாந்துறை ஏரி, பூலாம் பாடி ஏரி உள்ளிட்ட 60ஏரி கள் 1முதல் 25சதவீத கொ ள்ளளவைத்தான் எட்டியுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வானிலை ஆய்வு மையங் களால் கணிக்கப்பட்டும் ஏனோ நிவர் புயலால் மழையின்றி பொய்த்துப் போன தாலும், அதற்கு முன்புபெய்த தொடர் மழையும் வரத்து வாய்க்கால்கள் முறை யாக சீரமைக்கப்படாத கா ரணத்தால் ஏரிக்கான நீர் வரத்து இன்றி மீதமுள்ள 60ஏரிகளும் 25 சதவீதத்தி ற்கு குறைவாகவே உள் ளது. புரெவி புயல் காரண மாக இன்னும் சில ஏரிகள் மட்டும் 100சதவீதக் கொள்ளளவை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tags : Arumbavoor ,lakes ,district ,Perambalur ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!