பேச்சுவார்த்தையால் தீர்வு சூறைக்காற்றுடன் பலத்த மழை துறையூர் சாலையில் மரம் சாய்ந்தது

பெரம்பலூர், டிச. 4: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புரெவி புயல் தாக்கத்தால் கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் பெரம்பலூரும் ஒன்று என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன் காரணமாக 2ம் தேதி இரவு தொடங்கி விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. அதேபோல் நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரம்பலூர்- துறையூர் சாலையில் பாளையம் கிராமத்திற்கு 100 மீட்டர் முன்பாக சாலையில் 50 ஆண்டு பழமையான புளியமரம் சூறைக்காற்றுக்கு சாய்ந்து விழுந்தது.

இதனால் நேற்று இரவு 7.30 மணியில் இருந்து 9.30 மணி வரை பெரம்பலூர்- துறையூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஷாபுதீன், உதவி கோட்ட பொறியாளர் பாபுராமன் உத்தரவின்பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரத்துடன் சென்று சாலையின் குறுக்கே சாய்ந்து சாய்ந்து கிடந்த புளியமரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதேபோல் நேற்று காலை வீசிய சூறைக்காற்றுக்கு பெரம்பலூர் நகரின் மையத்தில் உள்ள சங்குபேட்டை பகுதியில் சாலையோரம் இருந்த பழமையான மரம் சாய்ந்து மின்கம்பிகளில் ஆபத்தான நிலையில் தேங்கி நின்றது. நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு விரைந்து சென்று மரத்தை அறுத்து அகற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

Related Stories:

>