×

மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பெய்து வரும் கனமழை காரணமாக மேகமலை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை அருவி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அருகே அமைந்துள்ளதால் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகவும் உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மேகமலை அருவிக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மாநில எல்கையை ஒட்டிய மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கால் மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது. அருவியில் நீர்வரத்து சீர் ஆனதும் மீண்டும் தடை விளக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியில் தடை பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமல் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றனர்.

Tags : Meghamalai Falls ,Theni ,Andipatti ,Theni district ,Western Ghats ,Kerala state government ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...