×

திருத்துறைப்பூண்டி அரசுப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, ஆக. 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. முதுகலை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கருணாமூர்த்தி, ஆடின் மெடோனா, உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியை வெற்றிச்செல்வி வரவேற்றார்.

வட்டசட்ட பணிகள் குழு தன்னார்வலர் கருணாநிதி, வழக்கறிஞர்கள் கந்தசாமி, வீரமணி ஆகியோர் வட்ட சட்ட குழுவின் பணிகள் குறித்து பேசுகையில், ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும், சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு நேரம் என்று சிறிது நேரம் ஒதுக்கலாம். நம் நாட்டுக் குடிமகன்கள் அனைவரும் தங்களைப் பாதுகாக்கும் அடிப்படைச் சட்டங்களைப் பற்றிய பொது அறிவை பெற்றுவிட்டால், அனைவரும் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஏமாற்றப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள். என்று கூறினார். சமூக அறிவியல் பட்ட தாரி ஆசிரியர் முத்துராமன் நன்றி கூறினார்.

 

Tags : Legal Awareness Seminar ,Tiruthuraipoondi Government School ,Tiruthuraipoondi ,District Legal Services Committee ,Tiruthuraipoondi Government Boys’ Higher Secondary School ,Tiruvarur ,Bhaskaran ,Karunamoorthy ,Adin Madonna ,Uma Maheswari ,Vetriselvi ,Karunanidhi ,Kandasamy ,Veeramani ,District Legal Committee ,
× RELATED ஓய்வூதியர் தின விழா