×

செவ்வாய்பட்டி மாணவர்கள் மாணவிகள் கூட்டுறவு விழிப்புணர்வு போட்டிகள் வெற்றி

கறம்பக்குடி, ஆக. 6: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய அளவில் நடைபெற்ற கூட்டுறவு இயக்கம் பற்றிய விழிப்புணர்வு போட்டிகளில் செவ்வாய்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவில் தகுதி பெற்றுள்ளனர்.

கறம்பக்குடி ஒன்றிய அளவில் நடைபெற்ற கூட்டுறவு இயக்கம் பற்றிய விழிப்புணர்வு போட்டிகளான கதை சொல்லுதல், கட்டுரை போட்டிகளில் ஒன்றிய அளவில் செவ்வாய் பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளான விஜய் சார்மி மற்றும் மகா ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு இருவரும் வெற்றி பெற்றனர்.

இவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களை, தலைமை ஆசிரியர் பொறுப்பு காசிராஜா மற்றும் சின்ன ராஜா தீபா முத்துலட்சுமி பரமேஸ்வரி தனலட்சுமி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

 

Tags : Sevevaipatti ,Karambakudi ,Sevevaipatti Panchayat Union Government Middle School ,Pudukkottai ,Karambakudi union ,Sevevaipatti Government Panchayat Union Government Middle School ,Vijay Charmi ,Maha Sri ,
× RELATED ஓய்வூதியர் தின விழா