- தமிழ்நாடு அரசு
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- சுஷ்மா
- செம்ம அகர்வால்
- LGBTQ
- ஐஏ பிளஸ்
- உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: ஒரே பாலின, திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில் பதிவாளர்களுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்.ஜி.பி.டி.க்யூ., ஐ.ஏ பிளஸ் என்படும் ஒரு பாலின உறவினர், திருநர், திருநங்கை, திருநம்பி சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுஷ்மா மற்றும் செம்மா அகர்வால் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு அரசு திருநங்கையர்களுக்கான கொள்கை 2025ஐ கொண்டுவந்து ஜூலை 31 முதல் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருநங்கைகளுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட மற்ற பிரச்னைகள் குறித்தும் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். மாநில அரசின் கொள்கை முடிவு அமல்படுத்தப்படுகிறதா என்பதை மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் கண்காணிக்க வேண்டும்.
அதன் மூலம் ஒவ்வொரு முறையும் இட ஒதுக்கீடு கோரி அவர்கள் நீதிமன்றக் கதவுகளைத் தட்ட வேண்டிய நிலை ஏற்படாது. திருநங்கையர், ஒரே பாலின திருமணங்களை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இருந்த போதிலும், அந்தத் திருமணங்களைப் பதிவு செய்யும் போது அவர்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஒரே பாலின, திருநங்கையர் திருமணங்களை, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்தத் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், பதிவாளர்களுக்குத் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குஉத்தரவிட்டார்.
