×

சாலை அமைக்க பூமிபூஜை

பரமத்திவேலூர், ஆக.6: பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னசோளிபாளையம் ஊராட்சியில், ரூ.20.11 லட்சம் மதிப்பீட்டில் பரமத்தி-ஜேடர்பாளையம் சாலை முதல் சின்னசோலிபாளையம் கல்லாங்காடு வரை சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்து பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். கபிலர்மலை மத்திய ஒன்றிய செயலாளர் சரவணகுமார், தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Paramatthivellur ,Chinnacholipalayam Panchayat ,Kapilarmalai Panchayat Union ,Paramatthi-Jedarpalayam Road ,Chinnacholipalayam Kallangadu ,Namakkal West District ,K.S. Moorthy ,Kapilarmalai Central Union ,Saravanakumar ,South Union ,Saminathan ,District Representative ,Ramalingam ,Union ,
× RELATED நைனாமலை அடிவாரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா