தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருப்பூர்,டிச.4:  திருப்பூரில் காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று, திருப்பூர் நகர் மற்றும் சுற்றுபகுதிகளில்,அதிகாலை முதலே மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பணி நிமித்தமாக, இருசக்கர வாகனங்களில், ஓரிடத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல முடியாமல் பலரும் தவித்தனர். பொதுமக்கள் பலரும் ரெயின்கோட் அணிந்தபடியும், குடை பிடித்தபடியும் சென்றனர். வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் குறைந்து, குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது.

Related Stories:

>