- வாணியம்பாடி
- திருப்பட்டூர் மாவட்டம்
- செட்டியப்பனூர்
- சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை
- தேசிய நெடுஞ்சாலை
- திருப்பத்தூர்
- ஊத்தங்கரை
- சேலம்
- வாணியம்பாடி தாலுகா காவல்
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருப்பத்தூர், ஊத்தங்கரை, சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு உள்ளது. இங்கு வாணியம்பாடி தாலுகா போலீசாரின் வாகன சோதனைச்சாவடி மையம் உள்ளது. இந்த சோதனைசாவடியொட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தார் சாலையும் சேதமாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் மீண்டும் தேங்காதபடி அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
