தென்னை சாகுபடி தொழில்நுட்ப முதுநிலை பட்டய படிப்பு துவக்கம்

ஆனைமலை, டிச.4: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தொலைதூர திறந்தவெளி, தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்  சார்பில், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற முதுநிலை பட்டயப் படிப்பு துவக்க விழா ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணை பேராசிரியர் ராஜமாணிக்கம் வரவேற்றார். அப்போது அவர், தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும், தாய் மரம் தேர்ந்தெடுத்தல், கலப்பின ரகங்களை பயிர் செய்தல், தென்னை நடவு செய்தல், தென்னையில் நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களை மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, போன்ற பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் குறித்தும் பேசினார். தோட்டக்கலைத்துறை முதல்வர் புகழேந்தி தலைமை வகித்தார். தொலைதூர கல்வி இயக்ககம் இயக்குனர் ஆனந்தன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தாத்தூர் கிருஷ்ணசாமி, பயிர் பாதுகாப்பு இயக்குனர் பிரபாகர், நெல் துறை தலைவர் பேராசிரியர் கணேச மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையம் தலைவர் பிரணிதா நன்றி கூறினார்.

Related Stories:

>