×

பவானி தொகுதியில் 754 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பவானி, டிச.4:பவானி சட்டமன்ற தொகுதியில் 754 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் மதிப்பில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன்கார்டு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், தமிழக அரசு ஏழை, எளியோர், விவசாயிகள் மற்றும் நெசவாளர் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

வருவாய் துறையின் மூலம் தகுதி வாய்ந்தவர்களுக்கு முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களின் நலன் கருதி வீடு இல்லாததோருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், இலவச பட்டா, பசுமை வீடுகள் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில 7.5 சதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 22 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் கருப்பணன் பேசினார். இந்நிகழ்ச்சியில், 177 முதியோர்கள், 146 விதவைகளுக்கு உதவித்தொகை உத்தரவுகள் மற்றும் 390 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 754 பேருக்கு ரூ.84.63 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழுத் தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கே.ஆர்.ஜான், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் வரதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : constituency ,Bhavani ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...