×

புதுக்கடையில் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்

 

புதுக்கடை, ஆக. 5: கன்னியாகுமரி மாவட்ட பாரதீய விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம் முஞ்சிறை ஒன்றிய பிஎம்எஸ் அலுவலகத்தில் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் அருள்கணபதி முன்னிலை வகித்தார்.
இணை செயலாளர் தர்மராஜ் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் அமிர்தராஜ், சுபின் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க பேரவை பொருளாளர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மணல், சிமெண்ட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி நியாயமான விலையில் கிடைக்க வேண்டும், மணல் குவாரிகள் மற்றும் கல்குவாரிகளை அரசு ஏற்று நடத்தி, கட்டுமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்திட வேண்டும், , கட்டுமான தொழிலாளர்கள் பணிக்கு செல்லும்போது விபத்தில் மரணம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : UNORGANISED LABOUR UNION ,Committee ,Bharatiya Viswakarma Construction and Organisation Non-Labour Association ,Kanyakumari District ,Munchiri Union ,President ,Subramanian ,Secretary General ,Arulganapati ,Co-Secretary ,Dharmaraj ,Amritraj ,Subin ,State Union Council ,Treasurer ,Devdas ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...