×

அழகர்கோயிலில் ஆக.9 தேரோட்டம் தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்

 

மதுரை, ஆக. 5: அழகர்கோயிலில் ஆக.9ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், தேர் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கடந்த ஆக.1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவின் 4ம் நாளான நேற்றிரவு கருட பெருமாள் எழுந்தருளினார். இந்நிலையில் ஆக.9ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதனால் கோயில் முன்புள்ள தேரின் பாதுகாப்பு கூண்டுகள் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடித்திருவிழா காரணமாக கோயில் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

Tags : Alagarkoil ,Madurai ,Alaagarkoil ,Kallaghar Temple ,Sundararajab Perumal ,Annam ,Simmam ,Anumar ,Perumal ,
× RELATED ஓய்வூதியர் தின விழா