- . ஜே.
- நயினார்
- விருதுநகர்
- பஜாஜ் மாநிலம்
- ஜனாதிபதி
- நயினார் நாகேந்திரன்
- OPS
- 17வது பாஜா பூத் கமிட்டி மாநாடு
- திருநெல்வேலி
- மோடி
விருதுநகர்: கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால் எங்களுக்கு ஓட்டு குறையப்போவதில்லை என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள பாஜ பூத் கமிட்டி மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஓபிஎஸ் எஸ்எம்எஸ் அனுப்பியதாக வெளியிட்ட ஆதாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ‘‘எங்கள் கூட்டணியை விட்டு ஓபிஎஸ் வெளியேறிய காரணத்தினால், அவரைப் பற்றி பேசுவது என்பது தனிப்பட்ட நபரை விமர்சிப்பது போன்றதாகி விடும்.
அதுபற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது. கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால், எந்த காரணத்தை கொண்டும் எங்களது கூட்டணிக்கு ஓட்டு எங்கேயும் குறைய போவதில்லை. தூத்துக்குடி, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி வந்தது மக்களிடையே மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எங்கள் கூட்டணியில் யார் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு பலமான முறையில் வேலை பார்ப்பதற்கு பாஜ தயாராக உள்ளது’’ என்றார்.
பேட்டியின் போது பாஜ தேசியச் செயலாளரும், தமிழ்நாடு மாநில இணை பொறுப்பாளருமான சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
