×

கோரிக்கை மனு வழங்கலாம் நாகை மாவட்டத்தில் 101 செ.மீ மழை பதிவு

நாகை,டிச.4: நாகை மாவட்டத்தில் 101 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் அதிகப்படியாக வேதாரண்யத்தில் மழை பெய்துள்ளது.புரெவி புயல் எச்சரிக்கையால் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன்படி கடந்த 1ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழை நேற்று (4ம் தேதி) மதியம் வரை நீடித்தது. இதனால் சாலையில் எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கியது. தொடர் மழையால் நாகை மாவட்ட மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மழையளவு (மி.மீ): நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மதியம் வரைநாகை 134.50, திருப்பூண்டி 129.40, தலைஞாயிறு 141.40, வேதாரண்யம் 192.80, மயிலாடுதுறை 122, சீர்காழி 99.40, கொள்ளிடம் 70.80, தரங்கம்பாடி 54, மணல்மேடு 74. மாவட்டத்தில் ஒரே நாளில் பதிவான மொத்த மழைளவு 1017.90 என பதிவாகியுள்ளது. இது, 101 செ.மீட்டர் ஆகும்.

Tags : rainfall ,Naga ,district ,
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா