×

காரைக்கால் மாவட்டத்தில் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது

காரைக்கால்,டிச.4: காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார்.வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் காரணமாக காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, வங்க கடலில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் காரணமாக காரைக்கால் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருநள்ளாறு அடுத்துள்ள அரங்க நகர், அத்திபடுகை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் தாழ்வான பகுதிகளை அமைச்சர் கமலக்கண்ணன் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

ஆறுகள் கண்காணிப்பு:மாவட்டத்தில் மழையால் பெரிய அளவில் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் மழையால் நெற்பயிர் பாதிப்புகளை தடுக்க விவசாயிகளுடன், வேளாண்துறையும் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற சாலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சரியான முறையில் வடிகால் வசதிகள் ஏற்படுத்தாததால் மழைநீர் வடியால் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் முக்கியமாக அரசலாறு உள்ளிட்ட 6 ஆறுகள் கடலுடன் கலப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கூடுதலாக தண்ணீர் வருகிறது. இதனால் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஆறுகள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை நேரில் சென்று கண்காணித்து வருகின்றனர். இதேபோல் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : areas ,Karaikal ,district ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...