இவ்வாறு செய்திக்குறிப்பில் எஸ்பி பாலாஜி சரவணன் கூறியுள்ளார். புதுகை எஸ்பி அறிவுறுத்தல் மழையால் அமரகண்டான் குளம் நிரம்பியது

பொன்னமராவதி, டிச.4: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியில் தொடர் மழையின் காரணமாக இரண்டு வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததது. இதனையடுத்து தாசில்தார் திருநாவுக்கரசு, ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேசன், வேலு, ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் அயோத்திராஜா, விஏஓ ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் சென்று இரண்டு வீடுகளில் இருந்த 12 பேரை அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இதேபோல் மரவாமதுரையில் இரண்டு வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளது. ஏனாதியில் ஊருக்குள் புகுந்த மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தேனிலையில் சாய்ந்த ஆலமரம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பொன்னமராவதி மத்தியில் அமைந்துள்ள அமரகண்டான் குளம் நிரம்பி செல்கின்றது. ஏற்கனவே இந்த குளம் நிரம்பி இருந்த நிலையில் இந்த தொடர் மழையினால் நிரம்பி கழுங்கில் தண்ணீர் செல்கின்றது.

Related Stories:

>