×

புதுகையில் தொடர் மழை காரணமாக சேதமடைந்த வீட்டில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும்

புதுக்கோட்டை, டிச.4: புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மின்சாதனங்களை கையாளும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சாலையோரங்களில் உள்ள மின் கம்பங்கள், மரங்கள் மற்றும் மழை காரணமாக ஈரப்பதமான வீட்டுச்சுவர்கள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வாகனங்களை மரங்களின் அருகில் நிறுத்துவதை தவிர்க்கவும், இடியும் தருவாயில் உள்ள பழுதடைந்த மற்றும் உறுதித்தன்மையில்லாத பழைய வீடுகள், கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மழையின் காரணமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 94429-86179, ஹலோ போலீஸ் எண் 72939-11100, மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077, 04322-222207 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள வேண்டும்.

Tags : houses ,Residents ,camps ,Pudukkottai ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...