×

புதிதாக 40 பேருக்கு ஜேஎன்.1 தொற்று

புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 40 பேருக்கு ஜேஎன்.1 தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஜேஎன்.1 தொற்று பரவத்தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் வரை தொற்று பாதிப்பு 69 ஆக இருந்த நிலையில் புதிதாக 40 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 26ம் தேதி வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 109 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் 6 பேர், கர்நாடகாவில் 34, கோவாவில் 14, மகாராஷ்டிராவில் 9, கேரளாவில் 6, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் தலா4, தெலங்கானாவில் இரண்டு பேரும் புதிய வகையான ஜேஎன்.1 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேஎன்.1 தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்தாலும் உடனடியாக அச்சப்பட தேவையில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 92சதவீதம் பேர் வீட்டில் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளை தான் செய்வதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. எனினும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

* ஒரே நாளில் 529 பேருக்கு கொரோனா
ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையானது 4093ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொற்று பாதித்த இரண்டு பேரும், குஜராத்தில் ஒருவரும் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

The post புதிதாக 40 பேருக்கு ஜேஎன்.1 தொற்று appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...