×

வெங்கய்யா நாயுடுவுக்கு புதிய பதவி: மோடி ஒப்புதல்

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளின் போது, காந்தி அமைதி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த குழுவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இணைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெங்கய்யா நாயுடுவுக்கு ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில், “2024 மார்ச் 15ம் தேதி வரை காந்தி அமைதி பரிசு நடுவர் குழுவின் நியமன உறுப்பினராக உங்களை நியமிக்க மோடி ஒப்புதல் அளித்துள்ள தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வெங்கய்யா நாயுடுவுக்கு புதிய பதவி: மோடி ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Vengaiya Naidu ,Modi ,New Delhi ,Mahatma Gandhi ,Venkaiah Naidu ,
× RELATED மருத்துவமனை, பொது இடங்களில் தீ...