×

புதிய மெத்தை வாங்குபவர்கள் கவனிக்க!

நன்றி குங்குமம் தோழி

* மெத்தை தடிமனாக மூன்று அடுக்குக் கொண்டதாக இருக்க வேண்டும்.

* ரொம்ப அழுத்தமான மெத்தைகள் முதுகுவலி, அசதியை உண்டாக்கும். தவிர்ப்பது நல்லது.

* தூங்கும் போது முதுகு தண்டுவடம் லேசாக வளைந்தது போல் இருக்கும். அதற்கு ஏற்ப சவுகரியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் மெத்தைகளை வாங்கலாம்.

* மெத்தைகள் வாங்கும் போது தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதில் எந்தவிதமான பொருட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

* விலைக்குறைவு, தள்ளுபடியில் கிடைக்கிறது என்று வாங்கினால், தூக்கத்தைத் தொலைக்க வேண்டியதிருக்கும்.

* போர்ம் மெத்தைகள் குறைந்தது பத்து ஆண்டுகள் நீடிக்கும்.

* மெத்தையின் மேல் பகுதியில் உள்ள பேப்ரிக் தடிமனாக காற்று போகும் வகையில் உள்ளதா என்பதைச் சோதித்து வாங்க வேண்டும். அது நல்ல உறக்கத்தை கொடுக்கும்.

* மெத்தையின் மேல் உள்ள கவர், அகற்றித் திரும்பவும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்தால், அவ்வப்போது சுத்தம் செய்வதால் மெத்தையில் பாதிப்பு ஏற்படாது.

* மெத்தையில் பயன்படுத்தியுள்ள போர்ம் அடர்த்தியைச் சோதனை செய்து வாங்க வேண்டும்.

* பிராண்ெடட் மெத்தையை வாங்கும் போது அதன் நன்மை, தீமை அறிந்து வாங்குவது நல்லது.

* இப்போது மெத்தைக்கும் வாரன்டி உள்ளது. அவ்வாறு உள்ள மெத்தைகளை தேர்வு செய்வது நல்லது.

– சௌமியா சுப்ரமணியன், சென்னை.

The post புதிய மெத்தை வாங்குபவர்கள் கவனிக்க! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED கேஸ் விலை உயர்வு… சிக்கனத்துக்கு சில வழிகள்!